“பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக 80 பழங்குடி மாணவிகளுக்கு 20 நாட்கள் தற்காப்பு பயிற்சியான கராத்தே, சிலம்பம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி சிறப்பாக அளித்து பயிற்சி நிறைவு விழா இன்று 08.08.2024 சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக காவல் கண்காணிப்பாளர் சண்முகம் அவர்களின் உத்தரவின்படியும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் சாம் ராஜதுரை அவர்களின் அறிவுரைப்படி “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” “BETI BACHAO BETI BADHAO” என்ற திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் ‘ஒரிக்கை மற்றும் ஏகனாம்பேட்டை” அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயிலும் பழங்குடி இனத்தை சார்ந்த சேர்ந்த 80 பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சியான கராத்தே, சிலம்பம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி 10.07.2024-ம் தேதி முதல் 07.08.2024ம் தேதி வரை 20 நாட்கள் அளித்து அதன் நிறைவு விழாவினை இன்று 08.08.2024-ம் தேதி காஞ்சிபுரம் ஒரிக்கை அரசினர் ஆதிதிராவிட நல உயர்நிலை பள்ளியில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைவர் கலைச்செல்வி மோகன், காவல் கண்காணிப்பாளர் சண்முகம் கலந்துக்கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு கோப்பையும், பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். மேலும் இவ்விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் சாம் ராஜதுரை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி.சக்தி காவ்யா, சமூக நல பாதுகாப்பு துறை அலுவலர் சியாமளா, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் செல்வி.சசிரேகா, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் பிரபாவதி, சோமசுந்தரம், சுப்பிரமணி, கலைச்செல்வி மற்றும் ஏகனாம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுகுணாதேவி மற்றும் ஒரிக்கை ஆதிதிராவிடர்நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர் தமிழரசி, அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர்கள் கலந்துக்கொண்டனர்.