வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி,IPS., அவர்கள் 20.12.2023-ம் தேதி திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் காவல் அலுவலக பிரிவுகள் (Sections) நிர்வாக அலுவலகம் (நிர்வாகம்), நிர்வாக அலுவலகம் (கணக்கு) நிர்வாக அலுவலகம் (பொது) நிர்வாகபிரிவு, தண்டனைபிரிவு, விடுப்புபிரிவு, பொதுப்பிரிவு, ஊதியப்பிரிவு, பயணச் சலுகை பணப்பிரிவு, தற்செயல் மட்டும் கட்டிடப்பிரிவு என அனைத்து பிரிவுகளையும் ஆய்வு செய்து மாவட்டம் புதியதாக பிரிக்கப்பட்டதால் மேலும் புதிய பதிவேடுகளை பராமரிக்க அறிவுரைகள் வழங்கினார் மற்றும் பிரிவுகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்தார்.
மேலும் தனிப்பிரிவு அலுவலகம் (Special Branch) மற்றும் மாவட்ட ஆயுதப்படையில் பதிவேடுகள் காவல் ஆளிநர்களின் தளவாட பொருட்கள் மற்றும் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு காவல் வாகனங்களை வருடாந்திர ஆய்வு செய்தார் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்கள் உடன் இருந்தார்.
இன்று வருடாந்திர ஆய்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. புஷ்பராஜ், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் விநாயகம் தனிப்பிரிவு ஆய்வாளர் ரஜினி குமார் ஆயுதப்படை ஆய்வாளர்கள் பழனிச்சாமி, ரமேஷ் மற்றும்உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.