திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 05.08.2023-ம் தேதி வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். M.S. முத்துசாமி IPS., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான்.,IPS, அவர்களின் முன்னிலையில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களும், காவல் ஆய்வாளர்களும், உதவி ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர் லதா, IUCAW பிரிவு, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரபு, உதவி ஆய்வாளர் முனிரத்தினம் நாட்றம்பள்ளி காவல் நிலையம், தலைமை காவலர் ராதாகிருஷ்ணன் வாணியம்பாடி நகர காவல் நிலையம், செண்பகவல்லி IUCAW பிரிவு ஆகியோர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான்.,IPS, அவர்களின் பரிந்துரையின்படி வேலூர் சரக காவல் துறை துணைதலைவர் முனைவர்.M.S.முத்துசாமி IPS., அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டி ஊக்குவித்தார்.