தூத்துக்குடி: இன்று, 02.12.2024, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப. அவர்களின் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வில், 25 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 28 பேர், மேலும் மீனவ இளைஞர் ஊர்காவல் படைக்கு 7 பேர் என மொத்தம் 35 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள், தாங்கள் உரிய சான்றிதழ்களுடன் இன்று (02.12.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் ஆஜராகுமாறு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று நடைபெற்ற தேர்வில், 385 விண்ணப்பதாரர்கள், இதில் 54 பெண்கள் உட்பட, தேர்வில் பங்கேற்றனர். அனைத்து விண்ணப்பதாரர்களின் உயரம், கல்வித் தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவை கவனமாக பரிசீலிக்கப்பட்டன. இந்த தேர்வு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த தேர்வு செயல்முறை, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜமால், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன், கடலோர காவல் படை ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் ராஜதுரை, ஊர்க்காவல் படை வட்டார தளவாய் பாலமுருகன் மற்றும் படைத்தளபதி ராமகிருஷ்ணன் ஆகிய தேர்வுக்குழுவினரின் முன்னிலையில் நடைபெற்றது.