திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்களின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்ட இறுதியில் சிறப்பாக பணியாற்றி கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கடத்திய 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தமைக்காகவும், உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாச்சம்பட்டு பகுதிகளில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்தமைக்காகவும், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பித்தும் நீண்ட காலமாக நீதிமன்றத்தில் ஆஜராகாத எதிரியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமைக்காகவும், Pocso வழக்கில் குற்றவாளிக்கு 20 வருடம் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு உறுதுணையாக நீதிமன்ற காவல் பணியாற்றியமைக்காகவும் போன்ற மெச்ச தகுந்த பணிகளை செய்த மாவட்ட காவல்துறையினர் 52 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS, அவர்கள் பண வெகுமதி வழங்கி வெகுவாக பாராட்டி ஊக்குவித்தார்.