திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., (13.07.2023) ஜோலார்பேட்டை காவல் நிலையம் மற்றும் காவல் நிலையத்தில் பயன்படுத்தும் பதிவேடுகளை தணிக்கை செய்தார். மேலும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்களின் வழிகாட்டுதலின்படி விபத்துக்களை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் அதிகமாக விபத்து நடக்கும் Major Accident Areas பகுதிகள் ஆய்வு செய்து கண்டறியப்பட்டு உள்ளது.
இதன் மூலம் முதல்கட்டமாக பொதுமக்களின் நலனுக்காக இது வரை தாமலேரிமுத்தூர் சந்திப்பு, ஜோலார்பேட்டை சந்திப்பு, கோடியூர் சந்திப்பு, பொன்னேரி சந்திப்பு, மண்டலவாடி சந்திப்பு, கேத்தாண்டப்பட்டி மற்றும் பச்சூர் சந்திப்பு ஆகிய 7 இடங்கள் அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாக கண்டறியப்பட்டு விபத்து நடக்கும் இந்த பகுதிகளில் ஒளிரும் எச்சரிக்கை விளக்கு BLINKERING LIGHTS பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த கட்டமாக சென்னை தேசிய நெடுஞ்சாலை திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட வாணியம்பாடி பெருமாள் பேட்டை மேம்பாலம், மின்னூர் மின்வாரிய சந்திப்பு, மாராப்பட்டு மற்றும் கீழ் முருங்கை ஆகிய இடங்களில் BLINKERING LIGHTS பொருத்தப்பட உள்ளது என்று மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.