திருப்பத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2021-2023 ஆன்லைனில் வேலை வாய்ப்பு, குறைந்த விலையில் பொருட்கள், உங்களுடைய எண்ணிற்கு பரிசு கூப்பன் விழுந்துள்ளதாகவும் அதற்கு முன்பணமாக செலுத்தும் படி, Trading, Investment, முதலீட்டிற்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ஆன்லைனில் ஏமாந்ததாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு 963 மனு ரசீதுகள் வழங்கி விசாரணை மேற்கொண்டு 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி 963 மணுக்களில் பொதுமக்கள் இழந்த பணம் ரூபாய் 3,19,55,490/- சம்பந்தமாக ரூபாய் 2,83,73,930/- முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 48 நபர்களுக்கு இழந்த பணத்தை மொத்தம் ரூபாய் 19,79,393 பணத்தை பொதுமக்களுக்கு மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.