தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 11.08.2023 தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாணியம்பாடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, மற்றும் மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் துறை சார்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
மேலும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்,IAS, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்.,IPS, அவர்களின் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
எனக்கும் வேண்டாம்! நமக்கும் வேண்டாம்!!
போதை ஒழியட்டும்! பாதை ஒளிரட்டும்!!