“நான் சாதி, இன,வட்டார,மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதியளிக்கிறேன்” என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்து மாணிக்கம், துணைக் காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு ஆய்வாளர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட அளவில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த 13 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு நன்கொடையாக மொத்தம் ரூபாய் 36,000/- காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு காசோலையாக வழங்கினார்.
மேலும் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு காவல் நிலையத்தில் பயன்படுத்தும் பதிவேடுகளை தணிக்கை செய்தார். மேலும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.