அரியலூர் மாவட்டத்தை முழு காவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. கா. பெரோஸ்
கான் அப்துல்லா..
அரியலூர் மாவட்டம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007இல் உருவாக்கப்பட்டது.
கடந்த 2021 ஆண்டுகளுக்கு முன்பு அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் சரியான வாகன கட்டுப்பாடு வசதியின்றி மக்கள் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர் .
21.06.21 சென்னையில் பணிபுரிந்து அரியலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் திறன் பட ஆராய்ந்து முதலில் வாகன நெரிசல் மற்றும் வாகன போக்குவரத்தை சரி செய்தார்.
✓ சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த நகரமான அரியலூரில் கனரகவாகனங்கள் போன்ற பெரிய வாகனங்கள் அதிக சுமைகளை ஏற்றுக் கொண்டு தாறுமாறாக அனைத்து இடங்களிலும் வளம் வந்தனர் .அதனை கட்டுப்படுத்தி காலை & மாலை இருவேளையும் பள்ளி குழந்தைகள் அலுவலகம் செல்வோர் அனைவருக்கும் சிரமம் ஏற்படாமல் லாரி போன்ற அதிக எடை கொண்ட வாகனங்கள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அரியலூர் நகரத்தை கடந்து செல்லவும் நகரத்திற்குள் சென்று வரவும் தகுந்த ஏற்பாடு செய்து பொதுமக்களின் அன்பைப் பெற்றார்.
✓பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களை தடுப்பதற்கு 1098 அனைத்து அழைப்புகளுக்கும் தகுந்து நடவடிக்கை எடுக்கப்படுவது,
✓ குக்கிரமங்களை அதிகமாக கொண்டுள்ள அரியலூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியினால் ஏற்படும் குற்றங்களை தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தர ஏற்பாடு செய்தது,
✓தமிழக காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட குறும்பட நிகழ்வில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எடுத்த போதை விழிப்புணர்வு பற்றிய காணொளி தமிழக அளவில் முதல் அங்கீகாரத்தை பெற்றது (ராகம்) என்னும் குறும்படம்,
✓நகர்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் ஊராட்சிகளிலும் பெருமளவு அதிகமாக மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி -களை நிறுவி குற்ற தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளார்.
✓அவ்வபோது வாரம் ஒரு முறை காவல்துறையினர் பொதுமக்களை எவ்வாறு அணுக வேண்டும் குற்றங்களை எவ்வாறு விசாரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் மாவட்ட காவல்துறையினருக்கு எடுத்துரைக்கிறார்.
✓வாரம் ஒரு முறை காவலர்களுக்கு week off மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பணி மாறுதல் வேண்டி விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக பணி மாறுதல்கள் மற்றும் வயது முதிர்ந்த காவல்கள் -அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் அவர்களுக்கு ஏற்றவாறு பணி சுமைகளை குறைப்பதற்கு உரிய காவலர்களை நியமிப்பது ,
✓பிறந்தநாள் மற்றும் திருமண நாள் அன்று விடுப்பு அளித்து அவர்களை மகிழ்விக்கவும் அவர்களுக்கு வாழ்த்து கடிதங்கள் கொடுத்து ஊக்குவிப்பதும்,
✓Beat என்னும் அமைப்பின் மூலம் நகர்புறங்களில் வரும் அழைப்புகளுக்கு இரண்டு நிமிடத்திலும் கிராமப்புறங்களில் வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு *பத்து *நிமிடங்களிலும் உடனடியாக குற்றம் நடைபெறும் இடத்திற்கு சென்று குற்ற நிகழ்வுகளை தடுப்பதற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
✓அரியலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்ந்த நபர்களுக்கும் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினரும் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அவர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பெரும் நிதி திரட்டி அவர்கள் குடும்பத்திற்கு கொடுக்க உரிய ஏற்பாடு வழங்கப்பட்டு வருகிறது .(கடந்த வருடம் 10லட்சம் மற்றும் இந்த வருடம் 7லட்சம் ருபாய் கொடுக்கப்பட்டது.)
✓மேலும் மணல் கடத்தல் (ம) ரவுடிகளை கண்காணிக்க அனைத்து குற்ற நிகழ்வுகளையும் தனித்தனியாக கண்காணித்து தீர்வு காண சிறப்பு காவலர்களை நியமித்து தனிப்படைகளை நிறுவி மாவட்டத்தை அமைதி சூழலுக்குள் வைத்து வருகிறார்.
✓ரவுடிசம்களை (ம) போதைப் பொருள் விற்பனை லாட்டரி அனைத்தையும் முழுமையாக கட்டுப்படுத்தி அரியலூர் மாவட்ட மக்களை எந்த அச்சமின்றியும் மகிழ்ச்சியாக வாழ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
✓கடந்த மே மாதத்தில் கட்டிட தொழிலில் உள்ளவர்களை குறிவைத்து தான் கம்பி டீலர் என கூறி மோசடி செய்த நபர்ரை கைது செய்தது.
✓கிராமங்களில் ( ம) குக்கிராமங்களில் பொதுமக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கிய வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது ,
✓ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது.
✓கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கள்ளச்சாராயம் , கஞ்சா விற்பனை என சுமார் 150 போன் கால்களுக்கு உடனடி நடவடிக்கை( ம)இந்த செயல்களில் அளவுக்கு அதிகமாக மீண்டும் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் அடைப்பது.
✓மாதமாதம் சிறப்பாக பணியாற்றும் காவலர்களை
ஊக்குவிப்பது அவர்களுக்கு பாராட்டு -சான்றிதழ் வழங்குவது.
✓சமுக நல அறக்கட்டளைகளுடன் இணைத்து போதை பொருள் விழிப்புணர்வு -தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
✓ கீழப்புலியூர் ( ம) தஞ்சாவூர் சாலைகளில் போலீஸ் என கூறி பெட்டிகளில் மிரட்டி பணம் பறித்த சிறு வியாபாரிகளை அச்சத்திற்குள்ளாக்கிய வாலிபரை புகார் கொடுத்த சில மணித்துளிகளில் கைது செய்தது.
✓அனைவரிடமும் எளிமையாக பழகவும் மற்றும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் சந்தித்து தங்களது குறைகளை மற்றும் மனுக்களை தருவதற்கு வழிவகை செய்து சிறப்பாக அரியலூர் மாவட்ட மக்களை கண்காணித்து வருகிறார்.