✓அரியலூர் மாவட்ட, ஆண்டிமடம் வட்டத்தை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ(24) இவர்
சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த நபரை குண்டர் சத்தத்தில் திருச்சி சிறையில் அடைத்தது,
✓அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்காவல்படை தேர்வு முகம் நடைபெற்றதில் கலந்து கொண்ட ஆண்கள் 144 பேர் மற்றும் பெண்கள் 9 பேர் சான்றிதழ் சரிபார்த்து அவர்களுக்கு ஊக்குவிக்கும் எதிர்காலத்தில் காவல்துறையுடன் உதவியாக இணைந்து செயல்படுவதற்கான அறிவிப்புகளையும் வழங்கினர்.
✓திருமானூர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி அர்ஜுன்ராஜ் அவர்களை வெளியில் வந்தால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடும் என்பதால் அவரின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் திருச்சி சிறையில் அடைத்தனர்.
✓தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரம் என்பதால் வெடிமருந்து உரிமையாளர்கள் மற்றும் வெடிமருந்து நிறுவனங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்துரையாடினார் மேலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கண்டிப்புடன் எடுத்துரைத்தார்..
✓21.10.23 காவலர் வீர வணக்க நாள் _வீர மரணம் அடைந்தவர்களுக்கு 66 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
✓மேலும் திருமானூர் அருகே அனுமதி பெறாமல் வெடிபொருட்களை வைத்திருந்த இரண்டு உரிமையாளர்களும் இது வழக்கு பதிவு நடவடிக்கை எடுத்தது,
✓திருமானூர் அருகே அந்தோனியர் கோவிலை சேர்ந்தவர் குலமாணிக்கம் ,கணேசன் மகன் (பாஸ்கர்) இவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால் வெளியில் வந்தால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கில் இருப்பதால் அவரின் மீது குண்டர் சட்டத்தைப் பார்த்து காவலில் அடைத்தது.
✓ 16.10.23 அன்று ஜோசப் என்பவரது மகன் அந்தோணி ராஜ் சிறுமியை பாலியல் வன் தாக்குதல் செய்ததால் 20 ஆண்டுகள் சிறை மற்றும் 5000 அபராதம் விதித்து நீதிமன்ற காவலில் அடைத்தது.
✓தஞ்சாவூர் -அரியலூர் மாவட்டத்தில் பெரிதும் குற்ற வழக்குகள் ஈடுபட்ட மற்றும் செயின் திருட்டு, கொலை, கொள்ளை வழிப்பறியில் ஈடுபட்ட அருண்பாண்டியன் என்பவனை குண்டர் சட்டத்தில் அடைத்து பொது மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்தது,
✓பெரும்பான்மையாக குறைதீர்க்கும் கூட்டத்தில் வரும் குற்ற வழக்குகளை உடனடியாக விசாரித்து உடனடியாக தீர்வு கண்டு பொது மக்களுக்கு பாதுகாப்பையும் ,காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு பெரிதும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அரியலூர் மாவட்ட காவல்துறை சிறப்பாக தனது பணியினை செய்து வருகிறது.