இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் இ.கா.ப., அவர்கள் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படியும்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் அவர்கள் மற்றும் இணைய குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், காணாமல் போன மொபைல் போன்களை CEIR PORTAL- மூலமாக, கண்டுபிடிக்க ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் உள்ள வரவேற்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், கடந்த மூன்று மாத காலமாக CEIR PORTAL மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ₹41.5 இலட்சம் மதிப்பிலான 309 மொபைல் போன்களை, 01.07.2024 மாவட்ட காவல் அலுவலகம் கொண்டுவரப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் அவர்களால், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அந்தோணி ஆரி அவர்கள் (இணைய குற்றப்பிரிவு), சிவக்குமார் அவர்கள் (தலைமையிடம்) காவல் ஆய்வாளர்கள் செல்வகுமாரி (தனி பிரிவு), கார்த்திகேயனி (இணைய குற்றப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் காவலர்கள் உடனிருந்தனர்.