அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விரகாலூர் கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக் (கடை எண்-6411) கடந்த 14.01.2024 அன்று இரவு வியாபாரம் முடிந்ததும் மேற்பார்வையாளர் ரமேஷ் கடையினை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் 15.01.2024 அன்று மதியம் 12.00 மணியளவில் டாஸ்மாக் கடையை திறக்க வந்தபோது, டாஸ்மாக் கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு, 24 பெட்டிகளல் இருந்த 1152 மதுபாட்டில்கள்
திருடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1,49,760/- ஆகும். இது தொடர்பாக, கீழப்பழூர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்களின் உத்தரவின் படியும், அரியலூர் உட்கோட்ட துணைக்காவல்கண்காணிப்பாளர் திரு.எம்.சங்கர் கணேஷ் அவர்களின் மேற்பார்வையில், அரியலூர் காவல் ஆய்வாளர் திரு.சகாய அன்பரசு அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தியதில் டாஸ்மாக் கடையினுடைய பாரின் இரவு காவலாளியை தாக்கி விட்டு, டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் மூவர் ஈடுபட்டது தெரிய வந்தது.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மூன்று நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து எதிரி தளபதி மற்றும் மாரிமுத்து-வை இன்று போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 672 மதுபாட்டில்கள், 480 மது பாட்டில்களை விற்பனை செய்த தொகை ரூ.67,200/-, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 அரிவாள்கள், 2 கடப்பாரைகள், மற்றும் ஒரு ஆட்டோ ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள எபினேசரை போலீசார் தேடி வருகின்றனர்.