தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி 2024 காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றதில் அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகள் கலந்து கொண்டு 47 பதக்கங்கள் 17 தங்கப்பதக்கம் 18 வெள்ளி பதக்கம் 12 பிரான்ஸ் பதக்கம் பெற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரில் சென்று பாராட்டு பெற்றுள்ளார்கள்.

இதன் பயிற்சி ஆசிரியராக கீழப்பழுர் காவல் நிலையத்தில் பணிபுரியும் மோகன் அவர்கள் இலவசமாக கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். இதே போன்று கடந்த 2023 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டத்திலும் நடைபெற்ற மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் 85 த்திற்கு மேற்பட்ட பதக்கங்கள் பெற்று வந்துள்ளர். கடந்த ஒன்னரை வருடங்களாக காவலர்களின் குழந்தைகளுக்கு கராத்தே கற்றுகொடுத்து திருச்சி, தஞ்சாவூர், கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு அழைத்து சென்று பல பதக்கங்கள் வாங்கி பெருமை சேர்த்து வருகிறார்..

சேலம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் 2009 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்கிறார். காவல்துறைக்கே கைதேர்த்த கலையை கற்று இருந்த இவர் அதன்பிறகு ஆவடி உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில்
கமாண்டோ பயிற்சியாளர் மற்றும் ஆல்-இந்தியா போலீஸ் பயிற்சியாளர்ஆக பணிபுரிந்து தமிழகம் முழுவதும் பல காவலர்களுக்கு தான் பயின்ற கலையை சிறப்பாக கற்க உதவி உள்ளார்..