சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், .கா.. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த பூக்கடை போக்குவரத்து உதவி ஆணையாளர் திரு.S.சம்பத் பாலன், C-2 யானை கவுனி  போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.S.ஜாகீர் உசேன், உதவி ஆய்வாளர்கள்  திரு.A,சீனிவாசகம்,  திரு.S.தர்மன், திரு.P.A.ரமேஷ், V-6  கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.C.லோகநாதன், உதவி ஆய்வாளர் திரு.M.மோகன், தலைமைக் காவலர்கள் திரு.A.வெங்கடேசன், (த.கா.36695), திரு.G.சரவணன் (த.கா.36535), திரு. G.சரவணக்குமார் (த.கா.26146), காவலர்கள் திரு.V.சிவராஜ், (55835) திரு.D.குமரேசன் (கா.56663), K-11 CMBT காவல் நிலைய ஆய்வாளர் திரு.P.விஜயபாஸ்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.A.சுப்பிரமணி, முதல் நிலைக்காவலர் R.அசோக் (மு.நி.கா.37572), K-10 கோயம்பேடு காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.S.சுகேந்திரன் (த.கா.25983), முதல்நிலைக் காவலர் திரு.T.அசோக்ராஜ் (மு.நி.கா.29709), காவலர் திரு.S.தமிழரசன் (கா.57664),  F-3  நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.K.சேட்டு, உதவி ஆய்வாளர்கள் திரு.M.மருது, திரு.J.ரவிச்சந்திரன், தலைமைக்காவலர்கள் திரு.P.விக்டர் இம்மானுவேல் (த.கா.21117), திரு.A.கோபிநாதன், (த.கா.28982), முதல் நிலைக்காவலர்கள் திரு.V.விஜயலட்சுமணன் (மு.நி.கா.51951), திரு.K.வேல்முருகன், (மு.நி.கா.58167),  E-1  மயிலாப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.S.குமார், R-6 குமரன் நகர் காவல்  நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.A.மணிமலா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.,கோபிநாத், தலைமைக்காவலர்கள் திரு.P.புருஷோத்தமன், (த.கா.20314), திரு.T.ராஜசேகர் (த.கா.32325), R-11 இராமாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.E.அருண், திரு.E.சீனிவாசன், தலைமைக்காவலர்கள் திரு.சிவானந்தன், திரு.சுப்பிரமணியன், காவலர்கள் திரு.P.பிரகாஷ், (கா.55685), திரு.G.வேல்முருகன் (கா.56282), R-1 மாம்பலம் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.P.தியாகராஜன், (.கா.27213), காவலர் திரு.M.அழகுராஜா, (கா.50593)  R-11 இராமாபுரம் காவல் நிலைய காவலர்கள் திரு.M.பிரபு (கா.46852), திரு.V.விஜயன் (கா.58571), என 1 உதவி ஆணையாளர், 5 காவல் ஆய்வாளர்கள், 11 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 23 காவல் ஆளிநர்கள் என 40 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று ( 02.09.2023) நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.

பூக்கடை சரக போக்குவரத்து உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து தினசரி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும், V-6  கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலையிலான காவல் குழுவினர் வீட்டை காலி செய்ய ஆயுதங்களுடன் அடியாட்களை கொண்டு மிரட்டிய 6 குற்றவாளிகளை கைது செய்தும், K-11 CMBT காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்தும், K-10  கோயம்பேடு காவல் நிலைய காவல் குழுவினர் செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தும், F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கள்ள நோட்டுகள் தயாரித்த கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்தும்,  E-1 மயிலாப்பூர் காவல் நிலைய காவல் குழுவினர் கொலை வழக்கு குற்றவாளியை கைது செய்தும், R-6 குமரன் நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தும், R-11 இராமபுரம் காவல் நிலைய காவல் குழுவினர் செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்தும், R-1 மாம்பலம் போக்குவரத்து காவல் நிலைய  காவல் குழுவினர் கீழே கிடந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்தும், R-11 இராமாபுரம் காவல் நிலைய காவலர்கள் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை கைது செய்தும், சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., (தெற்கு), திரு.கபில்குமார் சி.சரட்கர், இ.கா.ப., (தலைமையிடம்), திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப., (போக்குவரத்து), திரு.அஸ்ரா கார்க், இ.கா.ப., (வடக்கு), திருமதி.சி.மகேஸ்வரி, இ.கா.ப, (மத்திய குற்றப்பிரிவு), காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.ஏ.கயல்விழி, இ.கா.ப., மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.