சாலை விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக, ஆவடி காவல் ஆணையரகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று (11.02.2025) ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் சங்கர் நேத்ராலயா கண் மருத்துவமனை & அறக்கட்டளை இணைந்து வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாமை ஏற்பாடு செய்தது.
இம்முகாமை காவல் ஆணையாளர் கி. சங்கர், இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து, திருமுல்லைவாயில், SM நகர், போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், அவர் வாகன ஓட்டுனர்கள் சாலை விதிகளை கண்டிப்பாக பின்பற்றுதல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் குறித்து முக்கியமான அறிவுரைகளை வழங்கினார்.


இக்கண் பரிசோதனை முகாமில், சங்கர் நேத்ராலயா மருத்துவ குழுவினர் நவீன உபகரணங்களை பயன்படுத்தி, ஆவடி, பட்டாபிராம், பூந்தமல்லி, SRMC, செங்குன்றம், அம்பத்தூர், மணலி, எண்ணூர், பொன்னேரி ஆகிய காவல் சரகங்களில் உள்ள லாரி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் என சுமார் 170 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர். பார்வை குறைபாடு உள்ள ஓட்டுனர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன, மேலும் கண்புரை உள்ளிட்ட நோய்கள் கண்டறியப்பட்டவர்களுக்கு அதற்கேற்ப சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது.



முகாமின் துவக்க விழாவில், **ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர் அர்ச்சனா ராமசுந்தரம் (முன்னாள் உறுப்பினர், இந்திய லோக் பால்மன்றம்), கூடுதல் காவல் ஆணையாளர் கே. பவானீஸ்வரி, இ.கா.ப., அவர்கள், போக்குவரத்து பிரிவு காவல் துணை ஆணையாளர் அன்பு அவர்கள், டாக்டர்.ராஷிமா, தலைமை மருத்துவர், சங்கர் நேத்ராலயா கண் மருத்துவமனை அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.