ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று (26.01.2024) 75 இந்திய குடியரசு தின விழா நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர், இ.கா.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆவடி காவல் ஆணையரகம் காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். நாட்டுபற்றை பறைசாற்றும் விதமாக தேசிய கொடியின் வண்ணமிகுந்த பலூன்கள் மற்றும் நாட்டின் அமைதியை போற்றும் வகையில் புறாக்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

இவ்விழாவில் ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த 97 காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்களுக்கு மாண்புமிகு தமிழ் நாடு முதல்வரின் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றுகள் காவல் ஆணையாளர். உயர் அதிகாரிகள் வழங்கி கௌரவித்தார்கள்.ஆவடி காவல் ஆணையரகத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள் நடத்திய வீர தீர செயல்கள், கட்டளையில்லாத கவாத்து (silent Parade). துப்பரியும் மோப்ப நாய்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சி. கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ மாணவிகளின் நடனங்கள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

75வது குடியரசு தின விழாவில் ஆவடி காவல் ஆணையரகம் கூடுதல் காவல் ஆணையாளர் திரு.ராஜேந்திரன், இ.கா.ப., அவர்கள், ஆவடி காவல் ஆணையரகம் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் திருமதி.ஜெயலட்சுமி. இ.கா.ப., ஆவடி காவல்ஆணையரகம் மத்திய குற்றப் பிரிவு காவல் துணை ஆணையாளர் திரு.பெருமாள். இ.கா.ப., ஆவடி காவல் மாவட்ட காவல் துணை ஆணையாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., செங்குன்றம் காவல் மாவட்ட காவல் துணை ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன், மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் காவல் அதிகாரிகள், ஊர்காவல் படைப்பிரிவு, போக்குவரத்து வார்டன்கள். சமூக ஆர்வலர்கள். பத்திரிக்கை
மற்றும் ஊடக நண்பர்கள் கலந்துக்கொண்டு குடியரசு தின விழாவைசிறப்பித்தார்கள்.