பேரிடர் மீட்பு இயந்திரங்கள் கருவிகள் சாதனங்களை. நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் ட்ரோன்கள் படகுகள் மக்கள் பார்வைக்கு இன்று காட்சிப்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் IPS காவல்துறை கூடுதல் இயக்குனர் ஆயுதப்படை திரு மகேஷ் குமார் அகர்வால் IPS காவல் துறை தலைவர் ஆயுத படை திருமதி விஜயகுமாரி IPS காவல்துறை செயலாக்கம் தலைவர் ஜெயஸ்ரீ IPS அறிவுறுத்தலின்படி

தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு ஆவடி 13 வது பட்டாலியன் கமாண்டன்ட் டாக்டர் தீபா சத்யன் IPS

தலைமையில் 18 குழுவை சேர்ந்த 986 பேரிடர் மீட்பு குழுவினர்

தமிழகம் முழுவதிலும் ஏற்படும் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொண்டு சவாலான பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பொது மக்கள் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு காட்சிபடுத்தும் விதமாக ஆவடி காவல் ஆணையரக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பேரிடர் படை தலைமை அலுவலகத்தில் சாதனங்கள் கருவிகளை காட்சிப்படுத்தியுள்ளனர் இது இன்றும் நாளையும் நடைபெறுகிறது. புயல் மழை மற்றும் விபத்து ஏற்படும் சவாலான பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய உயிர் காக்கும் மற்றும் மீட்பு கருவிகள் சாதனங்கள் உபகரணங்களை பொது மக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிடும் வகையில் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்கின்ற விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு குழுவினர் பணிகள் இருக்கும் என்பதையும் தத்துரூபமாக காட்சிப்படுத்துகின்றனர். இதில் மினி ட்ரோன் கேமரா, மீட்பு பணிகளில் உணவு மருந்து

மற்றும் லைப் ஜாக்கெட் லைஃப் பாய் உள்ளிட்ட உயிர் காக்கும் பணிகளில் பயன்படுத்தும் ராட்சத ட்ரோன் மற்றும் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று மண்ணில் புதைவண்டர்களை கண்டுபிடிக்கும் VLC கேமரா மற்றும் ரயில் விபத்து போன்ற இரும்பு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க பயன்படும் ஹைட்ராலிக் ஜாக்கி மற்றும் இரும்பு வெட்டும் கருவிகள், ரப்பர் மற்றும் பைபர் படகுகள், மரம் வெட்டும் உபகரணங்கள் செயின்ஸா டைமன்ட் சா போன்ற பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய கருவிகள் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பேரிடர் நேரத்தில் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் சேட்டிலைட் போன்கள் மூலம் தொடர்பு கொள்ளும் சாதனம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கல் குவாரிகளில் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ரேடார் கருவிகள் தண்ணீரை வெளியேற்றும் ராட்சத மோட்டார் பம்புகள் மற்றும் ஜெனரேட்டர் இயந்திரங்கள் மின்சார உற்பத்தி செய்து மின்விளக்குகளை பயன்படுத்துதல் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் இலவசம்.