திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே போயம்பாளையத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி ஸ்ரீதேவி. இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருப்பூர் தாராபுரம் சாலை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இரண்டு நபர்கள் வழி கேட்பது போல நடித்து அவரது இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அவரது இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீதேவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அவிநாசிபாளையம் காவல்துறையினர் தேடி வந்தனர். சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் அவிநாசி பாளையம் பகுதிக்குட்பட்ட அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள்தான் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில் விருதுநகரை சேர்ந்த முரளிதரன், சிவகங்கையை சேர்ந்த துரைசிங்கம்,சங்கர்,ஜெகன்,ஆண்டியப்பன்,ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியான நிலையில் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து இரண்டு சவரன் தங்க நகை மற்றும் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- News
- Crime
- Events
-
Featured
-
Featured
-
Featured
-
- Silent Siren
- Videos
- Transfer
-
Featured
-
Featured
-
Featured
-
- Subscription
- Register
- Log In
Select Page