உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு நடைபயணம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.கே. அரவிந்த், இ.கா.ப அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள், பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து மாணவிகள், மற்றும் பெண் காவல்துறையினர் கலந்து கொண்டனர். பெண்கள் பாதுகாப்பு, சட்டமுறை உதவிகள், அவசர தொடர்பு எண்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமான தகவல்கள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது.


நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் பி.கே. அரவிந்த், பெண்கள் பாதுகாப்பு என்பது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டார். பெண்கள் தன்னம்பிக்கையுடன், பயமின்றி சமூகத்தில் வாழவும், சட்ட உதவிகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் விளக்கமளித்தார்.
இந்த விழிப்புணர்வு நடைபயணத்தின் மூலம் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பெருகி, சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.