கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் திரு.பிரபாகரன், நேற்று (29.09.2023) இரவு ரோந்தின் போது நீலாம்பூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கேட்பாரற்று நின்ற TN40L6482 என்ற Swift காரின் பதிவு எண்ணின் மூலம் கோவை புலியகுளத்தைச் சேர்ந்த அதன் உரிமையாளரை தொடர்பு கொண்ட போது, அவர் தனது கார் 20 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக தகவல் தெரிவி்த்துள்ளார். பின்னர் மேற்படி காவலர் பிரபாகரன் காரின் உரிமையாளரை சூலூர் காவல் நிலையம் வர சொன்னதுடன், மீட்பு வாகனத்தின் மூலம் காரை காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளார். மேற்படி காவலரின் நற்செயலை பாராட்டும் வகையில், இன்று (30.08.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,இ.கா.ப., அவர்கள், மேற்படி காவலரை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்
ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலரை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
