கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் கோவை மாவட்டத்தில் குற்றங்களை கண்காணித்து தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியும், சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று (06.11.2023) பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த ரோந்து காவலர் திரு.வெங்கடேஷ் பிரபு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகம் அடைந்த காவலர் அந்நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்நபர் தடாகம், எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ஆனந்தம் என்பவரது மகன் மாதேஷ்@ மாதேஸ்வரன்(22) என்பதும் அவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்து, காவல்துறையினர் அவரிடம் மேலும் விசாரணை செய்ததில், அவரிடமிருந்து பல இடங்களில் திருடப்பட்ட இரண்டு சக்கர வாகனம்-2, மடிக்கணினி-2 மற்றும் கைப்பேசி-17 ஆகியவற்றைப் பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் இன்று (07.11.2023) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.