கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பாக, பெருகி வரும் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பொது மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் மற்றும் KPR College of Arts Science and Research கல்வி நிறுவனம் சார்பாக இன்று (20.02.2024) சூலூரில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் சுமார் 1200 கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சூலூர் புதிய பேருந்து நிலையம் முதல் சூலூர் காவல் நிலையம் வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவ்விழிப்புணர்வு பேரணியில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர், சூலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் சைபர்கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர். இவ்விழிப்புணர்வு பேரணியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு வாசகங்களை 150-ற்கும் மேற்பட்ட பதாகைகள் மூலமாகவும். வாகன ஒலிபெருக்கி மூலமாகவும் விளம்பரப்படுத்தியும், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தும் பொதுமக்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இவ்விழிப்புணர்வு பேரணியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், இணையதளம் மூலமாக உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.