முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளையின் எட்டாம் ஆண்டு விழா மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா 15.11.2024 10.30 மணியளவில் காவலர் பயிற்சி பள்ளி வளாக ஆடிட்டோரிம் (PRS) டாக்டர் பாலசுந்தரம் ரோடு, கோயமுத்தூரில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் திரு வி. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், திரையுலக மார்க்கண்டேயன் திரு. சிவகுமார், சக்தி மசாலா நிறுவனர் திரு டாக்டர் பி .சி. துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அறக்கட்டளையின் தலைவர் திரு N. ரத்தினம் SP (Retd) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி பொதுநல அறக்கட்டளை பற்றி விளக்கி பேசினார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சினிமா நடிகர் திரு கார்த்தி அவர்கள் காவலர் குடும்ப நலனில் அக்கறை கொண்டு அவரின் வேண்டுகோள் இணங்க துவக்கப்பட்ட விழாவில் நடிகர் திரு சிவகுமார் அவர்கள் கலந்து கொண்டு இந்த அறக்கட்டளைக்கு ஒரு கோடி நிதி திரட்ட உதவி செய்துள்ளார்கள்.

அந்த தொகை வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையை வங்கியில் செலுத்தி அதில் கிடைக்கும் வட்டியில் இந்த அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளைக்கு சக்தி தேவி அறக்கட்டளை 10 லட்சம் வழங்கியதுடன் 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கி உள்ளார்கள். அத்துடன் பாடத்திற்கு மாறுதலுக்கு தக்கவாறு புதிய புத்தகங்களை பெற நிதி உதவி செய்துள்ளார்கள்.

இதில் பயின்ற பணியில் உள்ள மூன்று காவலர்களும் காவல் அதிகாரிகள் வாரிசு மூன்று பேர்கள் உதவி ஆய்வாளராகவும், ஒரு காவலர் தீயணைப்பு துறை அதிகாரிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்ற ஆண்டு மூன்று பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்துள்ளார்கள். ஒருவர் மத்திய அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடி கல்வி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக சேர்ந்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் குருப் | தேர்வில் மூன்று நபர்கள் ஆரம்பகட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று, சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இரண்டாம் கட்ட தேர்விற்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு கட்டணத்தில் 50% சலுகை பெற
காவல் ஆணையர் திரு வி. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் அவர்கள் உதவி செய்துள்ளார்கள். மீதியுள்ள 50% கட்டணத்தையும் சக்தி தேவி அறக்கட்டளை செலுத்தியுள்ளார்கள்.

இந்தப் பயிற்சி மையத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் வாழ்நாள் சான்றிதழையும், பிரதமர் மந்திரியின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் காப்பீட்டுத் திட்டத்திற்கான அடையாள அட்டை பெறவும் வசதி செய்துள்ளார்கள். அத்துடன் காவலர் மருத்துவமனைக்கு தேவையான ரத்தப் பரிசோதனை உபகரணம், ரத்த அழுத்த பரிசோதனை கருவி, ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவைகளை அறக்கட்ட சார்பாக வழங்கி உள்ளார்கள். அத்துடன் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பயிற்சி வளாகத்தில் நடைபெறும் மருத்துவ முகாமில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் பங்கு பெற காவல் ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்கள். அத்துடன் ராயல் கேர் போன்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற 30% கட்டண சலுகை பெற உதவி செய்துள்ளார்கள். இது போன்று பணியில் உள்ள காவலர்கள் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறார்கள்.

கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையர் திரு வி. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் அவர்கள் பேசிய போது காவல் அலுவலர்களின் உடல் நலம் பேன வேண்டும் என்றும் பணியில் உள்ள காவலர்களின் வாரிசு மாணவ மாணவியர்களின் போட்டி தேர்விற்கு உதவி செய்து வரும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை பாராட்டுக்குரியது என்றும் தமிழகத்தில் இது போன்ற அறக்கட்டளை வேறு எங்கும் இல்லை என்று தெரிவித்தார். சக்தி மசாலா நிறுவனர் திரு டாக்டர் பி. சி. துரைசாமி அவர்கள் பேசிய போது காவல்துறையில் பணிபுரிய 2 முறை முயற்சி செய்து வெற்றி பெற முடியாமல் தொழிலதிபரானதாகவும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை செய்யும் உதவிகளை மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும், இவர்களுக்கு அனைத்து உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


உலக மார்க்கண்டேயர் நடிகர் திரு. சிவகுமார் அவர்கள் பேசிய போது சிறு வயதில் ஓவியம் பயின்று பல இடங்களில் ஓவியம் வரைந்து பிறகு திரைத்துறைக்குச் சென்று உயர்ந்த நிலை அடைந்த பின் ஓய்வு பெற்று 2005 முதல் கம்பராமாயணம், மகாபாரதம், திருக்குறள், முழுமையாக படித்து இலக்கிய சொற்பொழிவு ஆற்றியதாகவும் அனைவரும் அறவழியில் செயல்பட வேண்டும் என்றும், அகரம், சிகரம், உழவன் அறக்கட்டளையும் இவரது குடும்பத்தினர் நடத்தி வருவதாகவும், கோயம்புத்தூரில் முன்னாள் காவல் துறை அதிகாரிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்னாள் காவல் துறை அதிகாரிகள் மற்றும் சக்தி மசாலா நிறுவனம் சார்பாக அதிக மதிப்பெண் பெற்ற காவல் குடும்ப மாணவர் மாணவருக்கு தல 25000 விதம் 25 பேருக்கு வழங்கப்பட்டது. விழாவின் இறுதியில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திரு பால்ராஜ் முன்னிலையில் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.