காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காவலர் மன்றம் அமைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, Tiruchirappalli மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, அதற்கு “காவலர் மன்றம்” என பெயரிடப்பட்டது.

இம்மன்றத்தை இன்று (25.02.2026) மாலை 4.30 மணிக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப. அவர்கள் திறந்து வைத்தார்.

காவலர்களின் குழந்தைகள் தங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடும் வகையில், இம்மன்றத்தில் புத்தகங்கள், செஸ், கேரம்போர்டு போன்ற உள்ளக விளையாட்டுகளும், வாலிபால், கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் போன்ற வெளிப்புற விளையாட்டு உபகரணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பயன்பாட்டிற்காக 2 கணினிகளும் நிறுவப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் பங்கேற்ற காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள், இந்த “காவலர் மன்றம்” வசதிகளை முழுமையாக பயன்படுத்தி, ஓய்வு நேரத்தை பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான முறையில் கழிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் அவர்கள் அறிவுறுத்தினார்.