நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று 03.09.2023 காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வெட்டாறு ECR ஆற்று பாலம் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக சோதனை சாவடி வழியே சட்டத்திற்கு புறம்பாக நுாதன முறையில் கடத்தி வரப்பட்ட 90MLஅளவு கொண்ட 600 பாண்டி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட ஒரு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட R.ராஜேஷ்குமார்(33) சுனாமி குடியிப்பு செல்லுார், நாகப்பட்டினம் என்ற நபரை கைது செய்து பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள்.

மேலும், இதுபோன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் உங்கள் எஸ்பியிடம் பேசுங்கள் – 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும்.