வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவானது எதிர் வரும் 29.08.2024-ந் தேதி மாலை 06.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி 08.09.2024-ந் தேதி மாலை 6.00 மணிக்கு கொடி இறக்கத்துடன் முடிவடைய உள்ளது. மேற்படி திருவிழாவில் சுமார் 10,00,000 பக்தர்கள் கலந்து கொள்ளபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திருவிழா தொடர்பாக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பணிகள் ஒழுங்குபடுத்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் G.கார்த்திகேயன், இ,கா,ப, மற்றும் தஞ்சாவூர் காவல் சரக துணைத்தலைவர்T.ஜியாவுல்ஹக், இ,கா,ப,, அவர்களின் ஆலோசனைப்படி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.K. அருண் கபிலன், இ,கா,ப, அவர்களின் தலைமையில் 05 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 16 துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், 90 ஆய்வாளர்கள், 150 உதவி ஆய்வாளர்கள், தாலுக்கா காவலர்கள், ஆயுதபடை காவலர்கள் மற்றும் சிறப்பு காவல் படையினர், கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் உட்பட சுமார் 2600 காவலர்கள் மற்றும் 400 ஊர் காவல் படையினர்களும் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்களை கண்காணிக்க 21 உயர் கண்காணிப்பு கோபுரம் (Watch Tower) மற்றும் 04 ஆளில்லா விமானம் (Drone Camera) மற்றும் பேராலயத்தை சுற்றி 760 கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டு உயர் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும் 10 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டுவருகிறது.

மேலும் பாதயாத்திரையாக அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் போது சாலை விபத்துக்களை தடுப்பதற்கு 03 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. பேராலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு உதவியாக 15 இடங்களில் காவல் உதவி மையமும், திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஆய்வாளர் தலைமையில் 18 குற்ற தடுப்புப்பிரிவு குழுக்களும் சாஸ்திரா பல்கலைக்கழக நிபுணர்களைக் கொண்டு FRS (Face Recognizing System) முலம் குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் பக்தர்கள் கடலில் குளிக்க தடைசெய்து எந்த ஒரு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க தடுப்புவேலி அமைத்து 24 மணி நேரமும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர்கள் மற்றும் காவலர்கள் அதிவேக படகு மற்றும் உயிர் காக்கும் கவசத்துடனும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடற்கரையில் கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த காவல் ஆளினர்களும் மற்றும் தன்னார்வ அமைப்பைச் சார்ந்தவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் G.கார்த்திகேயன், இ,கா,ப நேரில் ஆய்வு செய்தார்கள்.