பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டு நடைபெற்று வந்த காரணத்தினால் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் G.கார்த்திகேயன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி திருச்சி சகர காவல்துறை துணைத் தலைவர் M.மனோகர் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் படியும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளாதேவி அவர்களின் மேற்பார்வையில் பெரம்பலூர் காவல் ஆய்வாளர் திரு.கருணாகரன் அவர்களின் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு சிறப்பு வாகன தணிக்கை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே 28.07.2024 நடைபெற்றது.

அப்போது பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் இரு சக்கர வாகனத்தை திருடிக் கொண்டிருந்த நபர் காவல் ஆய்வாளரை கண்டதும் தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தவரை தீவிர விசாரணை செய்ததில் அவரது பெயர் சதீஷ்குமார் வயது (28) த/பெ பாலசுப்ரமணியன்,அய்யனார் கோவில் தெரு, துவாக்குடி மலை, திருவெறும்பூர் வட்டம்,திருச்சி மாவட்டம். என்பது தெரியவந்தது.

இவரை தீவிர விசாரணை செய்ததில் அவர் மீது நிறைய இருசக்கர வாகன திருட்டு வழக்கு உள்ளதும் வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது. அவருடன் பிரவீன் (27) த/பெ ரவிராஜ்,சோழன் நகர், கருமண்டபம்,திருச்சி மாவட்டம். என்பவரும் இணைந்து இரு சக்கர வாகனங்களை திருடி அதனை குறைந்த விலையில் விற்று வந்தது தெரிய வந்தது.
மேற்படி எதிரிகள் இருவரையும் 28.7.2024 நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில் கைது செய்து அவர்களிடமிருந்து 23 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து எதிரிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் திரு.கருணாகரன் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் தலைமையிலான வாகன தணிக்கையில் ஈடுபட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.