ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியைச் சேர்ந்த வேணுபாரதி என்பவர் சொந்த தொழில் தொடங்க யூடியூப்பில் தகவல்கள் தேடிக் கொண்டிருந்தபோது, “வீட்டிலிருந்து அகர்பத்தி தயாரித்து பணம் சம்பாதிக்கலாம்” என்ற விளம்பரத்தைக் கண்டார். உண்மை என நம்பி, அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு ரூ.5,00,000 முதலீடு செய்தார். ஆனால், அவருக்கு எந்த மெஷினும் அனுப்பப்படாமல் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ், IPS அவர்களின் உத்தரவின்பேரில், ராமநாதபுரம் சைபர் கிரைம் காவல்துறையினர் வேணுபாரதி அளித்த புகாரின் பேரில் உடனடி விசாரணை நடத்தினர். விரைவான நடவடிக்கையின்படி, அவர் இழந்த ரூ.5,00,000 பணத்தை மீட்டுகொண்டு, அவரது வங்கிக் கணக்கில் வரவு வைத்தனர்.

இதனையடுத்து, 29.01.2025 அன்று, அந்த தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதற்கான வங்கி அறிக்கையின் நகலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ், IPS அவர்கள் வேணுபாரதிக்கு வழங்கினார்.

நபர்கள் இணையதளங்களில் காணப்படும் விளம்பரங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.