மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று (24.01.2025), கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்ட காவல் எல்லைகளில் பதிவு செய்யப்பட்ட 255 கஞ்சா தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 157.687 கிலோ கிராம் கஞ்சா அழிக்கப்பட்டது.

இந்நிகழ்வு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சசிமோகன், இ.கா.ப., மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவின் படி, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் முறையாக அழிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் போதைப் பொருள் குற்றங்களை எதிர்க்கும் உறுதிப்பாட்டின் சின்னமாகும்.