கோவை மாவட்ட காவல்துறையினர், சமூகத்திற்கு தீங்கான போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, இன்று (12.02.2025), பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஜோதி நகர் பகுதியில் மேற்கொண்ட சோதனையில், கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (22), மணிகண்டன் (26), மற்றும் முகமது அப்துல்லா (26) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கண்டிக்கின்றனர்.
🔹 பொதுமக்கள் போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவித்தால், அவர்களின் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும்.
🔹 தகவல் தெரிவிக்க:
📞 கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 94981-81212
📲 வாட்ஸ்அப் எண்: 77081-00100
நல்ல சமுதாயத்தை உருவாக்க பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.