போதைப் பொருட்கள் முற்றிலும் ஒழிந்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று (11.03.2025) ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிபுரம் காவல் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். இதில், சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த முகமது ஷபீல் (39) என்பவரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்டவை:
🔹 1200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (சுமார் ₹5 லட்சம் மதிப்பு)
🔹 ஒரு நான்கு சக்கர வாகனம்
கைது செய்யப்பட்ட முகமது ஷபீல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை நீதிமன்ற காவலில் ஒப்படைத்துள்ளனர்.

பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை
போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
போதைப்பொருள் குறித்த தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்க,
📞 கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை: 94981-81212
📱 வாட்ஸ்அப்: 77081-00100
தகவல் தெரிவிப்போரின் ரகசியம் முழுமையாக பாதுகாக்கப்படும்.