கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பொள்ளாச்சி தாலுகா, பொள்ளாச்சி கிழக்கு, மகாலிங்கபுரம் காவல் நிலையங்களுக்கு ISO 9001:2015 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முக்கிய அங்கீகாரம் காவல் நிலையங்களின் பதிவேடுகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டதற்கும், பொதுமக்கள் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்ததற்கும், குற்றங்களை தடுக்கும் மற்றும் விசாரணை செய்யும் செயல்முறைகளை சிறப்பாக செயல்படுத்தியதற்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சட்டம்-ஒழுங்கை பராமரித்து, அவசரநிலைகளுக்கு விரைவான பதிலளிப்பு வழங்கியதற்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
🔹 இந்திய தர கவுன்சிலின் WASH (Workplace Assessment for Safety & Hygiene) விருது
மேற்படி காவல் நிலையங்கள் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ததற்காக இந்திய தர கவுன்சிலிடமிருந்து WASH (QCI) விருதையும் பெற்றுள்ளன.

காவல்துறையின் பாராட்டு விழா
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், இந்த ISO சான்றிதழ் பெற முயற்சி செய்து வெற்றி பெற்ற காவல்துறையினரை பாராட்டினார்.
இதற்காக உறுதியாக பணியாற்றிய பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) செல்வி ஸ்ருஷ்டி சிங், இ.கா.ப.,,
✅ பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சந்திரலேகா
✅ பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகன்
✅ மகாலிங்கபுரம் உதவி ஆய்வாளர் திரு. நவநீதகிருஷ்ணன் ஆகியோர் புகழப்பட்டனர்.
மேலும், இந்த காவல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து காவலர்களும் பொதுமக்களுக்கான சிறந்த சேவையை வழங்கி, காவல் நிலையங்களின் தரத்தை உயர்த்தியமைக்கு பாராட்டை பெற்றனர்.

கோவை காவல்துறையின் முன்னேற்றம்!
இத்தகைய தரச்சான்றிதழ் மற்றும் விருதுகள் பெறுவது, கோவை காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டையும், பொதுமக்களுக்கு தரமான காவல் சேவை வழங்கும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. 🚔✨