கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம் மற்றும் கே.ஆர் மருத்துவமனை இணைந்து மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை வியாழக்கிழமை சிறப்பாக நடத்தினர்.
இந்த ஊர்வலத்தை கே.ஆர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் திலகம் ராஜேஸ் கொடியசைத்து தொடக்கி வைத்தார். நிகழ்வில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) பொன்னுசாமி தலைமை வகித்தார்.
மகளிரின் பாதுகாப்பு, அவர்களின் சமூக, மருத்துவ முன்னேற்றம், கல்வி, அதிகாரம் மற்றும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஊர்வலம் அமைந்தது.

ஊர்வலத்தில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டு மகளிரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
இந்த நிகழ்வு பெண்களுக்கான பாதுகாப்பு, அவர்களுக்கான சமூக உரிமைகள் மற்றும் அவர்களின் வளர்ச்சி தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் நடைபெற்றது.