சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப., இன்று (31.01.2025) வேப்பேரி காவல் ஆணையரகத்தின் 2வது மாடியிலுள்ள கலந்தாய்வு கூடத்தில் அமைச்சுப்பணியாளர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், 41 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெறும் முதுநிலை நிர்வாக அதிகாரி G. தெய்வநாயகி அவர்களின் சேவையை சிறப்பித்து, நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.

மேலும், காவல் துறையில் சீரிய காவலர் குறைதீர்வு நடவடிக்கைகள், பணி ஓய்வு பெறும் காவலர்களின் பணப்பலன்கள், சலுகைகள், மற்றும் மனுக்கள் தொடர்பான விரைவு நடவடிக்கைகள் போன்ற பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் 267 அமைச்சு பணியாளர்களின் உழைப்பை பாராட்டி, பணவெகுமதி வழங்கினார். இதில் பதிவு எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், முதுநிலை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் வெகுமதி பெற்றனர்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) கபில்குமார் சி. சரட்கர், இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் (நிர்வாகம்) K. அதிவீரபாண்டியன், கூடுதல் துணை ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.