சென்னை: ஆஸ்திரேலிய துணை தூதரக அதிகாரிகள் இன்று (13.02.2025) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. ஆ. அருண், இ.கா.ப அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இந்த சந்திப்பு சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் சார்பாக,

  • திருமதி சிலாய் ஜாகி – ஆஸ்திரேலிய துணைத் தூதர், சென்னை
  • திரு. மேட் கிராப்ட் – விசாரணை கண்காணிப்பாளர், மூத்த அதிகாரி, ஆஸ்திரேலிய கூட்டாட்சி போலீஸ் (AFP), புது தில்லி
  • திரு. அலெக்சாண்டர் வெனிசியானோ – துணைத் தூதர், ஆஸ்திரேலிய துணை தூதரகம், சென்னை
  • திரு. சஞ்சய்மைனி – ஆலோசகர், ஆஸ்திரேலிய கூட்டாட்சி போலீஸ் (AFP)

ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, இருதரப்பின் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்புகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போன்றவை குறித்து இருதரப்பும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

சந்திப்பு இடையிலான உரையாடல் நேர்மறை முறையில் நடைபெற்று, இருதரப்பின் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.