விருதாச்சலம் அருகே எருமனூர் கிராமத்தில் அரசின் அனுமதி இல்லாமல் மதுபான பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பிரகாஸ்பதிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்று (28.03.2025) காலை போலீஸ் படையுடன் இணைந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டார். விருத்தாசலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த ராணி (40), கணவர் பெயர் சுரேஷ் என்பவர், தன்னுடைய வீட்டில் அரசின் அனுமதி இன்றி மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவருவதாக தகவல் வந்தது.

இதையடுத்து, போலீசார் ராணியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தி, கீழ்க்கண்ட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்:

  • Black Pearl 180 ml – 56 பாட்டில்கள்
  • Old Chef 180 ml – 06 பாட்டில்கள்
  • மொத்த மதிப்பு – ₹350/-

மொத்தம் 62 பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து, மதுவிலக்கு சட்டத்தின் கீழ் Cr.No.30/2025, U/S 4(1)(C), 4(1)(A), 4(1-A)(ii) TNP Act சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு அமல் பிரிவு DSP திரு. பார்த்திபன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, அப்பகுதியில் இத்தகைய சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.