கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் அவர்கள் மேற்பார்வையில், கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு உதவி ஆய்வாளர் சிவகுருநாதன், தலைமை காவலர் கிருஷ்ணராஜ், முதல்நிலை காவலர் சிவராஜ் ஆகியோர் கும்தாமேடு சோதனை சாவடியில் போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

S. ஜெயக்குமார் IPS
அப்போது Hero Splendor மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களை நிறுத்தி சோதனை செய்ததில், அவர்கள் பையில் 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, ஈச்சங்காடு, பாகூர், புதுவை மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (31) மற்றும் குமரேசன் (30) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், காவல் ஆய்வாளர் திரு. பாலாஜி மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரிடமிருந்து கஞ்சா வாங்கி வந்ததை ஒப்புக்கொண்டனர். அதன்பேரில், ஜெகநாதன் (22) – கூட்டேரிப்பட்டு மற்றும் பிரவீன் குமார் (19) – வானூர், விழுப்புரம் மாவட்டம் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன்
இதுவரை, இந்த வழக்கில் மொத்தம் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்கள் (PY01CA8142 – Hero Splendor, PY01BG0796 – Bajaj Pulsar, TN16A6184 – Bajaj Pulsar) பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சிறப்பான நடவடிக்கையில் ஈடுபட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் அவரது குழுவினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.