மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடி கடலூர் சிதம்பரம் வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்த குடும்பம் தொழில் பிரச்சனை காரணமாக சொந்த ஊர் மகாராஷ்டிரா மாநிலம் செல்ல பணம் இல்லாமல் உச்சிமேடு அருகே நின்று கொண்டு வருவோர் போவோரிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காவலர் முரளியிடம் உதவி கேட்டனர் ,உடனே அங்கு ரோந்து பணியில் இருந்த ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளர் அவர்களிடம் தெரிவித்து அவர்கள் மூலம் விசாரித்து உண்மை தகவல் என்று தெரிந்ததால் அவர்கள் சொந்த ஊர் செல்ல ரூபாய் 1000 கொடுத்து வழி அனுப்பி வைத்தார்.
சொந்த ஊர் செல்ல பணம் இல்லாமல் தவித்த வெளி மாநில குடும்பத்தினருக்கு பணம் கொடுத்து உதவிய கடலூர் மாவட்ட காவலர் முரளி
