கடலூர் அடுத்த கோதண்டராமபுரம் புதுக்குளம் பகுதியில் முருகன்கோவிலில் தஞ்சம் அடைந்த மயில் உடல்நிலை சரியில்லாமல் பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது அதை பார்த்த கிராம இளைஞர்கள் அதே பகுதியில் சமூகப் பணி செய்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் இராம்குமார், ஜெயராஜ் ஆகியோருக்கு  தகவல் தந்தையடுத்து உடனடியா கடலூர் மாவட்ட வன அலுவலர்  குருசாமி மற்றும் கடலூர் வனச்சரக அலுவலர் ரமேஷ்  கடலூர் வனவர்  திலகராஜ்  கடலூர் வனக்காப்பாளர் சிறப்பு பிரிவு  ரமேஷ்  மற்றும் கடலூர் ஓட்டுநர்  வனக்காப்பாளர்  ஆதவர்மன் ஆகியோர் அடங்கிய குழு மற்றும்  இரத்த உறவுகள் அறக்கட்டளை குழு வினர்  மயிலை மீட்டெடுத்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் .

வனத்துறை அதிகாரிகள் கோதண்டராமபுரம் கிராம மக்களையும் இரத்த உறவுகள் அறக்கட்டளை குழுவையும் பாராட்டினார்கள்.