ஆதரவற்ற முதியவர் சடலத்தை கண்ணியத்துடன் அடக்கம் செய்த தேனி மாவட்ட காவல்துறையினர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று 18.09.2023 அன்று ஆதரவற்ற முதியவர் ஒருவர் காலமான நிலையில் தகவல் அறிந்து கம்பம் தெற்கு காவல்நிலைய காவல்துறையினர் நேரில் சென்று விசாரனை மேற்கொண்டதில் சடலமாக இறந்து கிடந்த முதியவர்க்கு யாரும் ஆதரவு இல்லாத நிலையை அறிந்து கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் லாவண்யா அவர்கள் தகவல் அளித்ததின் பேரில் அவரது வழிகாட்டுதலில் சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் காவலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஒன்றினைந்து மீட்பு வாகனத்தில் ஏற்றி வந்து முதியவரின் சடலத்தை நல்அடக்கம் செய்து மாரியாதை செலுத்தினார்கள் மேலும் அப்பகுதி மக்கள் காக்கிக்குள்ளும் கரையும் தன்மை உண்டு என்றும் கண்ணியம் காத்த காவல்துறையை வெகுவாக பாராட்டி வருகின்றார்கள்.
Related Posts
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இ.கா.ப., சென்னை நொளம்பூர் காவல் நிலையத்தில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்…
January 7, 2023
காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
August 10, 2023