தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் (ADGP) திரு.சஞ்சய் குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.C.ஷ்யாம்ளா தேவி அவர்களின் அறிவுரையின்படியும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.மதியழகன் அவர்களின் வழிகாட்டுதல்படியும் பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.A.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக, பெரம்பலூர் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.A.பழனிசாமி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் 300 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியானது பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் தொடங்கி பெரம்பலூர் மூன்று ரோடு பகுதியில் முடிவடைந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் பின்வரும் சைபர் குற்றங்களான,
OTP தொடர்பான குற்றங்கள்
சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள்
Telegram Task Fraud
Crypto Currency Fraud
போலியான Apps
கடன் செயலி
போலி வேலை வாய்ப்பு
வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகள்
Part-Time Job Fraud
Investment fraud
போன்ற சைபர் குற்றங்கள் குறித்து சைபர் கிரைம் உதவி ஆய்வாளர்கள் திரு.மனோஜ், செல்வி.சிவமீனா, காவலர்கள் திரு.சதிஷ்குமார், திரு.ரியாஸ் அகமது, திரு.முத்துசாமி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தினர்.
மேலும் இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் “1930” என்ற இலவச அழைப்பு எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவுசெய்ய வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.