இன்று 14.06.2023-ஆம் தேதி தமிழக காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் இறுதிச் சுற்று போட்டி சென்னையில் உள்ள கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில் (Commando Shooting Range) நடைபெற்றது.
தமிழகம் முழுவதிலும் இருந்து காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த இறுதி போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் (DGP & HoPF) முனைவர். சி.சைலேந்திர பாபு, இ.கா.ப. காவல்துறை கூடுதல் இயக்குநர்கள் மற்றும் பல காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்பு கடந்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் உள்ள நான்கு காவல் மண்டலங்கள் மற்றும் தனி பிரிவுகளில் உள்ள அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் (ASP முதல் DGP வரை) முதல் சுற்று துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கைத்துப்பாக்கி (Pistol) மற்றும் துப்பாக்கி (Rifle) பிரிவுகளில் காவல் அதிகாரிகள் பதக்கங்களை வென்றனர்.
மேலும், 2023-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கென்றே தனியாக ஒரு துப்பாக்கி சுடும் போட்டி அகில இந்திய அளவில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான முன்னேற்பாடாக தமிழ்நாடு அளவில் பெண்களுக்காக, கடந்த மாதங்களில் தமிழகத்தில் உள்ள நான்கு காவல் மண்டலங்கள் மற்றும் தனி பிரிவுகளில் உள்ள 1797 பேர் (பெண் காவல் உயர் அதிகாரிகள் முதல் பெண் காவலர்கள் வரை) துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு. அதில் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதி போட்டியானது கடந்த 08.06.2023 மற்றும் 09.06.2023 ஆகிய தேதிகளில் ஒத்திவாக்கம் கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில், கைத் துப்பாக்கி (Pistol), தானியங்கி (Carbine) துப்பாக்கி மற்றும் துப்பாக்கி (Rifle) பிரிவுகளில் நடைபெற்றது. அதில் பெண் காவல் உயரதிகாரிகள் முதல் பெண் காவலர்கள் வரை கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர்.
காவல் உயர் அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட இரண்டு சுற்று போட்டிகளில் இருந்து முதல் 12 இடங்களைப் பிடித்த அதிகாரிகளுக்குள் சாம்பியன் போட்டி வைக்கப்பட்டது. அதில் காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் (DGP & HoPF) முனைவர். சி.சைலேந்திர பாபு, இ.கா.ப. அவர்கள் Champion of Champion பதக்கம் மற்றும் கோப்பையை வென்றார். இரண்டாவது இடத்தை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. கே.கார்த்திகேயன் பிடித்தார்.
இந்த போட்டிகள் முடிந்த பின்பு, நடந்த பரிசளிப்பு விழாவிற்கு முனைவர். சி.சைலேந்திர பாபு, இ.கா.ப. காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் அவர்கள் தலைமை ஏற்று பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினார். இப்போட்டியினை திரு. எச். எம். ஜெயராம். இ.கா.ப. காவல்துறை கூடுதல் இயக்குநர், செயலாக்கம் அவர்கள் தலைமையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து நடத்தபட்டது.
JPR (Editor),Chennai.