மேற்கு மண்டலத்திற்க்கு உட்பட்ட கோயமுத்தூர் மற்றும் சேலம் சரகத்திற்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களை சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கான புலனாய்வு நுணுக்க பயிற்சி வகுப்புகள் கோயம்புத்தூர் பணியிடை பயிற்சி மையம் மற்றும் சேலம் பணியிடை பயிற்சி மையத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் K. பவானீஸ்வரி,IPS, அவர்களின் ஆணையின்படி 5 நாள் பயிற்சி வகுப்புகள் 16.10.2023 முதல் 17.11.2023 வரை 4 குழுக்களாக( Batch) இரண்டு பணியிடைப் பயிற்சி மையத்திலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் குற்றங்களை தடுக்கவும் ,குற்ற வழக்குகளை நவீன முறையில் புலனாய்வு மேற்கொள்ளவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் புலனாய்வு அதிகாரிகள் திறம்பட செயல்படவும், புலனாய்வு நடைமுறைகள் மற்றும் குற்ற வழக்குகளில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனயை பெற்றுத்தறுவதற்க்கான பயிற்சி வகுப்புகளை காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு ),துணை காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு ),காவல் ஆய்வாளர், துணை இயக்குனர் குற்ற வழக்கு தொடர்பு துறையில் இருந்து கூடுதல் அரசு வழக்குறைஞர் மற்றும் அரசு உதவி வழக்குறைஞர்கள் ஆகியோர் வகுப்புகள் நடத்த உறுதுணையாக இருந்து சட்ட வகுப்புகளை சிறப்பான முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பயிற்சியை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் K. பவானீஸ்வரி,IPS, அவர்கள் கோயம்புத்தூர் பணியிடை பயிற்சி மையத்தில் துவக்கி வைத்தார் உடன் கோயமுத்தூர் சரக காவல்துறை துணைத் தலைவர் A.சரவண சுந்தர்,IPS, கலந்து கொண்டார். இப்ப பயிற்சி வகுப்பில் கோயமுத்தூர் மற்றும் சேலம் சரகத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பான பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்