திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் வேலை தருவதாக கூறி மோசடி செய்தவர்களிடமிருந்து பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அபிரதீப், இ.கா.ப. அவர்கள். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் வேலை தருவதாக கூறி ரூ.11,25,000/-ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப. அவர்கள் உத்தரவுப்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P.சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி.M.மீனா அவர்கள் மற்றும் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து இழந்த பணம் ரூ.11,25,000/-ஐ மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Posts
பல்லடம் குற்றப்பிரிவு ஆய்வாளர் கவிதாலட்சுமி தலைமையில் போதை மாத்திரை விற்பனை செய்த இருவரை கைது செய்தனர்
July 12, 2024
குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினரை நேரில் அழைத்து பாராட்டிய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன்
October 22, 2024