பழனி பேருந்து நிலையத்தில் நீண்ட நாட்களாக தங்கியிருந்த வீடற்றோர் மற்றும் முதியவர்களை பாதுகாப்பாக காப்பகத்துக்கு அனுப்பும் நடவடிக்கையை, நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவல்துறை மேற்கொண்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுப்பிய கோரிக்கையின் பேரில், பழனி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் தனன்ஜெயம் உத்தரவின் பெயரில்,

மணிமாறன் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்கள், காவல்துறையின் ஏற்பாட்டில் பேருந்து மூலம் பாதுகாப்பாக வீடற்றோர் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள். இதன் மூலம் பேருந்து நிலையத்தில் குற்றச் சம்பவங்கள் குறையும் என காவல்துறை எதிர்பார்க்கிறது.
