திண்டுக்கல் மாவட்டம் எரியோடைச் சேர்ந்த ஆனந்தி (45) என்பவரிடம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.20 இலட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி ஆதார் கார்டு, பான் கார்டு, மற்றும் வங்கி விபரங்களை பெற்றுக்கொண்டு ரூ.2,00,000/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் திண்டுக்கல் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் மீனா அவர்கள் மற்றும் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.2,00,000/- பணத்தை மீட்டனர்.
இதனை அடுத்து (07.09.2023) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V.பாஸ்கரன் அவர்கள் மீட்கப்பட்ட ரூ.2,00,000/- பணத்தை ஆனந்தி அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.