கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில், 2025 ஜனவரி 8ஆம் தேதி, காவல்துறையில் 25 ஆண்டுகளாக எந்தவித துறை ரீதியான தண்டனையும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாராட்டப்பட்டனர்.
இதனை முன்னிட்டு, பல்வேறு காவல் நிலையங்களில் தங்களின் கட்டுப்பாடும் முழுமையான பொறுப்புணர்ச்சியுடனும் பணிபுரிந்து வரும் இந்த சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின், IPS அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகளை வழங்கி, அவர்களது சேவையை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு காவல்துறையின் ஒழுக்கத்தையும், நிலைத்த உழைப்பையும் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.