கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா. ஸ்டாலின் IPS தலைமையில் CCTNS 2.0 இரண்டாம் கட்ட சோதனை (24.03.2025) கோட்டார் காவல் நிலையத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தென் மண்டல SCRB காவல் ஆய்வாளர் வெர்ஜின் சாவியோ, மாவட்ட SCRB உதவி ஆய்வாளர் பத்மா ஆகியோர் பங்கேற்றனர்.

🔹 CCTNS 2.0 statewide rollout
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் CCTNS 2.0 செயல்படுத்தப்படும். முதல்கட்ட சோதனை 20.12.2024 அன்று திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னை CCBயில் தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட சோதனை 45 நாட்கள் நீடித்து, பின்னூட்டத்தின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும்.

🔹 நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய அதிகாரிகள்:
📌 நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் IPS
📌 மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம் துணை காவல் கண்காணிப்பாளர் பிச்சையா
📌 கோட்டார் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள்

🚨 CCTNS 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் காவல் பணியில் மேலதிக துல்லியம் மற்றும் செயல்திறன் அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.