“கல்லூரி காலங்கள்தான் வாழ்வில் வசந்த காலம்-ஒழுக்கமான மாணவர்களாக வாழ்வை உயர்த்திக் கொள்ளுங்கள்”
பல்லடம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரையில் இயங்கி வரும் பார்க் கல்லூரியில் 32 வது பேட்ச் புதிதாக கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவர் ரவி, கல்லூரியின் தாளாளர் கார்த்திக், பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கிய பின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். “நம் வாழ்வில் கல்லூரி காலம் தான் வசந்த காலம் எனவும் மூன்று ஆண்டுகள் நமக்கு கிடைக்கும் வசந்த காலத்தை ஒழுக்கமுள்ள மாணவர்களாக தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகளை சுட்டிக்காட்டி கல்விதான் உங்களை உயர்த்தும் எனவும் ஒழுக்கத்தோடு கல்வியை பயின்றால் அனைத்தும் உங்களைத் தேடி வரும் எனவும் சிறப்பாக கல்வி கற்று கல்லூரிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.